உள்ளூர் செய்திகள்

குடியிருப்பு பகுதிகளில் புகுந்த குரங்கை படத்தில் காணலாம்

விளாத்திகுளத்தில் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகள்

Published On 2022-12-07 09:12 GMT   |   Update On 2022-12-07 09:12 GMT
  • விளாத்திகுளம் காமராஜ் நகர் 13-வது வார்டு பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
  • வெளியே செல்லும் குழந்தைகள் பெண்கள் என அனைவரையும் உணவுக்காக குரங்குகள் விரட்டி வருகிறது

விளாத்திகுளம்:

விளாத்திகுளம் காமராஜ் நகர் 13-வது வார்டு பகுதி யில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு வனப் பகுதியில் இருந்து குரங்குகள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்தும் மேலும் கொய்யா, சப்போட்டா காய்கறி செடிகளை சேதப்படுத்தியும் வாசல்கள், ஜன்னல்கள் வழியாக வீடுகளில் நுழைந்து மளிகை சாமான்கள், காய்கறிகளை எடுத்துச் சென்றுவிடுகிறது.

இதனால் சிறிய குழந்தைகள் வெளியில் நடமாட முடியாமல் சிரமப்பட்ட வருகின்றனர்.வெளியே செல்லும் குழந்தைகள் பெண்கள் என அனைவரையும் உணவுக்காக குரங்குகள் விரட்டி வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சப்பட்டு சுதந்திரமாக வெளியில் நடமாட முடியாத சூழல் உள்ளது.

மேலும் இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் குரங்கின் சேட்டை தாங்காமல் பகல் வேளையில் கதவுகளை திறக்காமல் வீட்டில் உள்ளேயே இருக்கின்றன. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காததால் பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News