சேறும் சகதியாக மாறிய சாலை: மண் கொட்டி சீரமைத்த ஊராட்சி மன்ற தலைவர்
- ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் முனிராஜ் முயற்சியால் நொரம்பு மண் கொட்டி சேறும் சகதியுமாக இருந்த சாலையை சீரமைத்தார்.
- இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சிரமம் இல்லாமல் கடந்து சென்றனர்.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்டது அதியமான் கோட்டை பகுதி. இந்தப் பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் கிராம பகுதியில் இருந்து தருமபுரி-சேலம் நெடுஞ்சாலையை இணைக்கும் தார் சாலையை போக்கு வரத்துக்காக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலையானது சுமார் 20 வருடங்களுக்கு முன்பாக தார் சாலையாக அமைக்கப்பட்டதால் தற்பொழுது குண்டும் குழியமாக காணப்படுகிறது.
பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக சாலையில் உள்ள குழிகளில் மழைநீர் தேங்கி உள்ளது.
இந்த சாலையில் அதிகப்படியான வாகனங்கள் சென்று வருவதினால் சேறும் சகதியாகவும் மாறி உள்ளது. இதே பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிக்கூடங்கள், பஞ்சாயத்து அலுவலகம் ஆகியவைகளுக்கு செல்லவும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் மருத்துவமனைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதனால் இந்த சாலையை சீரமைத்துக் கொடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் பல வருடங்க ளாகவே கோரிக்கை விடுத்தனர்.
இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கா ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் காலை ஒன்றிணைந்து சேற்றில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த அதியமான் கோட்டை போலீசார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை அமைக்க உரிய அதிகாரிகளிடம் எடுத்துக் கூறுவதாக பேச்சு வார்த்தை நடத்தி போராட் டத்தை கலைத்தனர்.
அதன் அடிப்படையில் நேற்று ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் முனிராஜ் முயற்சியால் நொரம்பு மண் கொட்டி சேறும் சகதியுமாக இருந்த சாலையை சீரமைத்தார்.
இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சிரமம் இல்லாமல் கடந்து சென்றனர்.