உள்ளூர் செய்திகள்

மின் மயானம் அமைப்பதை கண்டித்து குறிஞ்சிப்பாடியில் பெண்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

குறிஞ்சிப்பாடியில் மின் மயானம் அமைப்பதை கண்டித்து பெண்கள் சாலை மறியல்

Published On 2023-08-29 07:50 GMT   |   Update On 2023-08-29 07:50 GMT
  • கல்வி நிறுவனங்கள் என சுற்றுச்சூழல் மாறிப்போனது.
  • மின் மயானம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது .

கடலூர்:

குறிஞ்சிப்பாடி பேரூராட்சி அருகே பழமையான மயானம் ஒன்று உள்ளது. தொடக்கத்தில் இந்த இடம் வயல்வெளிகளுக்கு இடையே இருந்தது. நாடா வட்டத்தில் இப்பகுதியில் குடியிருப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் என சுற்றுச்சூழல் மாறிப்போனது. இந்த மயானத்தால் சிறு சிறு சங்கடங்கள் இருந்து வந்தாலும் அதனைப் பொதுமக்கள் சகிப்புத்தன்மையுடன் ஏற்றுக் கொண்டனர்.

இந்த நிலையில் இந்த மயானத்தை மின் மயானமாக மாற்ற பேரூராட்சி முடிவு செய்து அதற்கான நிதியையும் ஒதுக்கியது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் இந்த மின் மயானத்தை வேறு மயானத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.அமைச்சர் கலெக்டர் உள்ளிட்டோ ருக்கு மனுவும் அனுப்பினர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அதே இடத்தில் மின் மயானம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது . இதனைக் கண்டித்து அப்பகுதி பெண்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குறிஞ்சிப்பாடி போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர் அதனைத் தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

Tags:    

Similar News