உள்ளூர் செய்திகள்

தாழ்வாக செல்லும் மின்வயர்கள் பேருந்துகள் செல்வதை படத்தில் காணலாம்.

தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் விபத்து ஏற்படும் அபாயம்

Published On 2023-07-13 13:39 IST   |   Update On 2023-07-13 13:39:00 IST
  • தாழ்வான பகுதியாக மின்கம்பத்தில் இருந்து மின்சார வயர்கள் தொங்கி கிடப்பதால் பேருந்தில் உரசும் அபாயம் உள்ளது.
  • உடனடியாக மின்சார வாரியம் தாழ்வாக உள்ள மின் கம்பிகளை உயர இழுத்து கட்ட வேண்டும்.

பென்னாகரம்,

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சியில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த பேருந்து நிலையத்தை அகற்றப்பட்டு மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் கட்ட ஒப்பந்தம் விடப்பட்டு தற்போது ரூபாய் 4 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்காலிக பேருந்து நிலையமாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே செயல்பட்டு வருகிறது.

அங்கு காலை, மாலை நேரங்களில் அதிக அளவில் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் ஒகேனக்கல் செல்லும் சுற்றுலா பயணிகள் என சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

தருமபுரியில் இருந்து வரும் பேருந்துகள் ஒகேனக்கல் புறவழிச் சாலையாக வழியாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வரும்போது அலுவலகத்திற்கு முன்பு தாழ்வான பகுதியாக மின்கம்பத்தில் இருந்து மின்சார வயர்கள் தொங்கி கிடப்பதால் பேருந்தில் உரசும் அபாயம் உள்ளது.

இதனால் பேருந்தில் மின்சாரம் பாய்ந்தால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனை உடனடியாக மின்சார வாரியம் தாழ்வாக உள்ள மின் கம்பிகளை உயர இழுத்து கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றன.

Tags:    

Similar News