உள்ளூர் செய்திகள்

ஓசூர் பகுதியில் கொத்தமல்லி விலை உயர்வு: காய்கறிகளுடன் ஓசியில் கொடுப்பதை நிறுத்திய வியாபாரிகள்

Published On 2022-09-21 15:14 IST   |   Update On 2022-09-21 15:14:00 IST
  • தமிழகத்தின் பகுதிகள் மற்றும் கர்நாடகாவிற்கு கொத்தமல்லி அனுப்பப்படுகிறது.
  • கொத்தமல்லி 45 நாள் பயிர் என்பதால் விவசாயிகள் விரும்பி சாகுபடி செய்கின்றனர்.

 ஓசூர், 

கிருஷ்ணகிரிமாவட்டம், ஓசூர், தேன்கனிக் சூளகிரி, கோட்டை சுற்று வட்டாரத்தில், 3,000 ஏக்கருக்கு மேல், ஆண்டு முழுவதும் கொத்தமல்லி சாகுபடி நடக்கிறது.

இதை மையமாக சூளகிரியில் பெரிய கொத்தமல்லி மார்க்கெட் இயங்குகிறது. இங்கிருந்து, தமிழகத்தின் பகுதிகள் மற்றும் கர்நாடகாவிற்கு கொத்தமல்லி அனுப்பப்படுகிறது.

கொத்தமல்லி 45 நாள் பயிர் என்பதால் விவசாயிகள் விரும்பி சாகுபடி செய்கின்றனர்.மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழையால் கொத்தமல்லி தோட்டத்திற்குள் தண்ணீர் தேங்கி செடி அழுகியது. இதனால் சந்தைக்கு வரத்து குறைந்து அதன் விலை உயர்ந்துள்ளது.

ஓசூர் உழவர் சந்தையில் கடந்த, 10 நாட்களுக்கு முன், 150 முதல், 200 கிராம் கொண்ட ஒரு கட்டு கொத்தமல்லி, 30 ரூபாய் என விற்றது, நேற்று, 70 முதல், 80 ரூபாய் என விற்பனையானது.

காய்கறிகள் வாங்கினால், கொத்தமல்லியை கொடுத்து வந்த கடைக்காரர்கள், தற்போது விலை உயர்வால் கொடுப்பதை நிறுத்தி விட்டனர்.

இதேபோல தருமபுரி மாவட்டத்தில் பல பகுதிகளிலும் ஓசூர், தளி, கெலமங்கலம், சூளகிரி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட ஒன்றியங்களில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி சொட்டுநீர்ப் பாசனம் மூலமாக குறுகிய காலத்தில் அதிகளவில் லாபம் தரும் தோட்டப்பயிர்களான கொத்தமல்லி, புதினா உள்ளிட்ட தோட்டப் பயிர்களை விவசாயிகள் தொடர்ந்து பயிரிட்டு வருகின்றனர்.

இங்கு விளையும் தரமான மற்றும் வாசம் மிகுந்த கொத்தமல்லி சென்னை, மதுரை கோவை உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் தினசரி விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலும் இங்கு விளையும் கொத்தமல்லிக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பயிரிடப்பட்ட கொத்தமல்லி தொடர் மழையால் அழுகி வீணாகி விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது.

அதனால், கொத்தமல்லியின் விலை கிடுகிடுவென உயர்ந்து மூன்று நாட்களுக்கு முன்பு கட்டு கொத்தமல்லி 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்தாது. தற்போது தருமபுரி காய்கறி மார்க்கெட்டில் கட்டு 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News