கலெக்டரிடம் மனுஅளிக்க வந்த ெபாதுமக்களை படத்தில் காணலாம்.
பஞ்சாயத்து தலைவர் மீது ஏர்கோள்பட்டி கிராம மக்கள் கலெக்டரிடம் பரபரப்பு புகார்
- ஊராட்சி மன்ற தலைவரும், அவருடன் இரண்டு நபர்களும் சேர்ந்து தாழ்த்தப்பட்ட உங்களுக்கு தனிநபர் கழிப்பிடம் எதற்கு எனக் கூறி கட்ட விடாமல் தடுத்து வருகின்றனர்.
- புகார் கொடுத்தவர்கள் மீது மிரட்டும் காவல்துறை மீதும், தனிநபர் கழிப்பிடம் கட்ட விடாமல் எங்களுக்கு கொலை மிரட்டல் விடும் பஞ்சாயத்து தலைவர், மற்ற இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த மஞ்சாரஹள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஏர்கோள்பட்டி கிராமத்து பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
நாங்கள் எங்கள் பட்டா நிலத்தில் தனிநபர் கழிப்பிட கழிவறை கட்ட உள்ளோம். இதனை ஊராட்சி மன்ற தலைவரும், அவருடன் இரண்டு நபர்களும் சேர்ந்து தாழ்த்தப்பட்ட உங்களுக்கு தனிநபர் கழிப்பிடம் எதற்கு எனக் கூறி கட்ட விடாமல் தடுத்து வருகின்றனர்.
இது குறித்து பென்னாகரம் தாசில்தாரிடமும், ஏரியூர் காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தோம். ஏரியூர் காவல் நிலைய போலீசார் நீங்கள் தனிநபர் கழிப்பிடம் கட்டினால் உங்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என மிரட்டுகிறார்.
புகார் கொடுத்தவர்கள் மீது மிரட்டும் காவல்துறை மீதும், தனிநபர் கழிப்பிடம் கட்ட விடாமல் எங்களுக்கு கொலை மிரட்டல் விடும் பஞ்சாயத்து தலைவர், மற்ற இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு தனிநபர் கழிப்பிடம் கட்ட அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.