இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணிபுரிய முன்னாள் படைவீரர்களுக்கு இட ஒதுக்கீடு
- தருமபுரி மாவட்டத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணிபுரிய முன்னாள் படைவீரர்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
- தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த தகுதியுள்ள முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிட்-இல் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம் மற்றும் திருச்சி Division-களில் Retail Outlet Dealers ஆக பணிபுரிய முன்னாள் படைவீரர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க ப்பட்டுள்ளது. அதில் சிசி-1 எனக் குறிப்பிட்டிருக்கும் பிரிவு களில் தகுதியான முன்னாள் படைவீரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தகுதியுடைவர்கள் விண்ணப்பிக்க www.petrolpumpdealerchayan என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். வரும் 27-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். மேலும் விபரங்களுக்கு 0427-2274545, 0427-2274555 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
எனவே தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த தகுதியுள்ள முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறும், விண்ணப்பத்திருப்பின் அதன் விவரத்தினை தருமபுரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.