உள்ளூர் செய்திகள்

மீட்கப்பட்ட மரநாய்.

கிணற்றில் விழுந்த மரநாய் குட்டிகளுடன் மீட்பு

Published On 2022-07-31 15:28 IST   |   Update On 2022-07-31 15:28:00 IST
  • கிணற்றின் உள்ளே அரிய வகை மரநாய் ஒன்று தனது குட்டிகளோடு தண்ணீரில் தத்தளித்தது தெரிய வந்தது.
  • தேங்காய் வியாபாரி உதவியுடன் மரநாய் மற்றும் அதன் குட்டிகளை கிணற்றில் இருந்து பத்திரமாக மீட்டனர்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்பாதி வசித்து வருபவர் சீனிவாசன். இவரது வீட்டின் பின்புறத்தில் அமைந்துள்ள கிணற்றிலிருந்து வெகு நேரமாக சப்தம் கேட்டுள்ளது. அருகே சென்று பார்த்த போது கிணற்றில் உள்ளே அரிய வகை மரநாய் ஒன்று தனது குட்டிகளோடு தண்ணீரில் தத்தளித்தது தெரிய வந்தது.

இதனை அடுத்து அக்கம் பக்கத்தில் உள்ள தேங்காய் வியாபாரி உதவியுடன் மரநாய் மற்றும் அதன் குட்டிகளை கிணற்றில் இருந்து பத்திரமாக மீட்டனர்.அப்போது அதில் உள்ள மர நாய்க்குட்டி மரத்தின் மீது ஏறி நின்றது.

உடனடியாக சீர்காழி வனத்துறைக்கு தகவல் கொடுத்து வன சரகர் டேனியல் தலைமையில் வனவர்கள் வந்து மரத்தில் இருந்த மரநாய் குட்டியை மீட்டு பின்னர் மூன்று மரநாய்களையும் கூண்டில் அடைத்து கொண்டு சென்று வனப்பகுதியில் விட்டனர்.

Tags:    

Similar News