உள்ளூர் செய்திகள்

நடுரோட்டில் உள்ள மின்கம்பத்தை படத்தில் காணலாம்.

கோவில்பாளையத்தில் நடுரோட்டில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க கோரிக்கை

Update: 2022-06-25 11:07 GMT
  • சாலை விரிவாக்கம் செய்யப்பட்டபோது, நடுரோட்டில் இருந்த மின் கம்பத்தை, ஓரமாக மாற்றி அமைக்காமல் விட்டு விட்டனர்.
  • இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் செல்லும் போது நடுரோட்டில் மின்கம்பம் என்பது சரிவர தெரிவதில்லை.

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள பொங்கலுார் கோவில்பாளையத்தில் சமீபத்தில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது, நடுரோட்டில் இருந்த மின் கம்பத்தை, ஓரமாக மாற்றி அமைக்காமல் விட்டு விட்டனர்.

இதனால் மின் கம்பம் நடுரோட்டில் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் செல்லும் போது நடுரோட்டில் மின்கம்பம் என்பது சரிவர தெரிவதில்லை. இதனால் சிலர் விபத்துக்கு உள்ளாகின்றனர். மேலும் வாகனங்கள் மின்கம்பத்தில் மோதினால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, மின் கம்பத்தை உடனடியாக ரோட்டோரத்தில் அமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News