குன்னூரில் கால்வாய், படிக்கட்டுகள் சரி செய்யும் பணி தொடக்கம்
- கழிவு நீர் கால்வாய், படிக்கட்டு ஆகியவை 20 ஆண்டுகளுக்கு மேலாக உடைந்து இருந்தது.
- ரூ.50 லட்சம் மதிப்பில் கால்வாய் மற்றும் பழுதடைந்து உள்ள படிக்கட்டுகளை சரிசெய்யும் பணி தொடங்கப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் குன்னூர் 25-வது வார்டு ராஜாஜி நகரில் அய்யப்பன் கோவில் எதிர்புறம் ஜாக் பள்ளிவாசல் செல்லும் சாலை மற்றும் கழிவு நீர் கால்வாய், படிக்கட்டு ஆகியவை 20 ஆண்டுகளுக்கு மேலாக உடைந்து இருந்தது.
அங்கு ரூ.50 லட்சம் மதிப்பில் கால்வாய் மற்றும் பழுதடைந்து உள்ள படிக்கட்டுகளை சரிசெய்யும் பணி தொடங்கப்பட்டது.
எஸ்.ஏ.டி.பி. திட்டத்தின் கீழ் 33 லட்சம் ரூபாயும், கலைஞர் மேம்பாடு நிதியில் சுமார் 16.80 லட்சம் ரூபாயுடன் பணிகள் தொடங்கப்பட்டது. இதில் நகர மன்ற தலைவர் ஷீலா கேத்திரின், நகர மன்ற ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, நகர மன்ற உறுப்பினர் ஜாகிர் உசேன், மற்றும் ஒப்பந்தர் ஜெயராம், தி.மு.க நிர்வாகிகள் அபி பேன்சி, ரஷீத் பாய், சாதிக் ஜிம், சாதிக், இஸ்மாயில் பாய், தர்மா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதனை நிறைவேற்றி தருவதாக தேர்தலின் போது தி.மு.க. கவுன்சிலர் ஜாகீர் உசேன் வாக்குறுதி கொடுத்திருந்தார். அதனை தற்போது நிறைவேற்றி கொடுத்துள்ளார். அவரை பொதுமக்கள் பாராட்டினார்.