வேலியில் கல் தூண்கள் பிடுங்கி எறியப்பட்டு உள்ள காட்சி.
வானூர் அருகே ஆதீனமடத்துக்கு சொந்தமான வேலிகள் அகற்றம்: அ.ம.மு.க. பிரமுகர் உள்பட 20 பேர் மீது வழக்கு
- இதனை அகற்றவேண்டும் என்று ஆதீனம் மடம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
- இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு சென்று ஆக்கிரமிப்பை அகற்றினர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் பொம்பூர் ஆதீனமடம் உள்ளது. இந்த மடத்துக்கு சொந்தமான நிலம் வானூர் அருகே குயிலாபாளையத்தில் உள்ளது. இந்த இடத்தை பலர் ஆக்கிரமித்திருந்தனர். இதனை அகற்றவேண்டும் என்று ஆதீனம் மடம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு சென்று ஆக்கிரமிப்பை அகற்றினர். அதன் பின்பு ஆதீனம் மடத்தை சேர்ந்தவர்கள் மீட்கப்பட்ட நிலத்தில் வேலி அமைத்து பாதுகாத்தனர்.
இதற்கிடையில் இந்த இடத்தில் அமைக்க ப்பட்டிருந்த வேலிகள் அகற்றப்பட்டது. இதணை அறிந்த ஆதீனமடம் நிர்வாகிகள் ஆரோவில் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு குயிலாபாளையம் பகுதியை சேர்ந்த அ.ம.மு.க. நிர்வாகி சுந்தர், பற்குணம், அர்ஜிணன், திருநாவுக்கரசு உள்ளிட்ட 20 பேர் சேர்ந்து வேலியை அகற்றியதாக வழக்குபதிவு செய்யப்பட்டது.