உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களின் தொழில் மேம்பாட்டிற்கு நிவாரணம்

Published On 2022-07-27 10:17 IST   |   Update On 2022-07-27 10:17:00 IST
  • “தொழில் முனைவோர்களுக்கான கொரோனா உதவி மற்றும் நிவாரணத்திட்டம்” என்ற புதிய திட்டத்தினை தமிழக அரசு செயல் படுத்தப்பட உள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புபவர்கள் இணையதளம் மூலமாகவோ, மாவட்ட தொழில் மையத்தை நேரடியாகவோ தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்:

கொரோனா தொற்று காலத்தில் பாதிக்கப்பட்ட தகுதி வாய்ந்த தொழில் முனைவோர்கள் பயனடையும் வகையில், "தொழில் முனைவோர்களுக்கான கொரோனா உதவி மற்றும் நிவாரணத்திட்டம்" என்ற புதிய திட்டத்தினை தமிழக அரசு உருவாக்கி செயல்படுத்த ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 2022-23ம் ஆண்டு முழுவதும் செயல் படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் 2 வெவ்வேறு கூறுகளை உடையதாகும்.

தொற்று பரவலால் வணிக ரீதியாக பாதிக்கப்பட்ட தனி நபர்கள், தனியுரிமை அல்லது பங்குதாரர் நிறுவனங்கள், தங்கள் பழைய நிறுவனத்தை மறு உருவாக்கம் செய்ய அல்லது ஒரு புதிய நிறுவனத்தை தாமாகவோ அல்லது தமது சட்டபூர்வ வாரிசுகள் மூலமாகவோ தொடங்குவதற்கான உதவியை பெறலாம்.

வயது வரம்பு 21 வயது முதல் 55 வயது வரை இருக்க வேண்டும். 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த திட்டத்திற்கான திட்ட மதிப்பீடு ரூ.5 கோடி வரை இருக்கலாம். இயந்திரத் தளவாடங்களின் மதிப்பில் 25 சதவீதம் அரசு மானியமாக அதிகபட்சம் ரூ.25 லட்சம் வழங்கப்படும்.

எந்த பகுதியிலும் அமைந்து இயங்கிக்கொண்டிருக்கும், கொரோனா தொற்று பரவலால் பாதிக்கப்பட்ட குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொழில் நுட்பமேம்பாடு, நவீனமயமாக்கலை மேற்கொள்ள ஆதரவு வழங்கப்படும். அதற்கென கொள்முதல் செய்யப்படும் எந்திரத் தளவாடங்களின் மதிப்பில் 25 சதவீதம் அரசு மானியமாக அதிகபட்சம் ரூ.25 லட்சம் வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புபவர்கள் இணையதளம் மூலமாகவோ, மாவட்ட தொழில் மையத்தை நேரடியாகவோ தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News