உள்ளூர் செய்திகள்

அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரை பூ தூவி வரவேற்ற காட்சி.

சோத்துப்பாறை அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

Published On 2023-11-01 05:50 GMT   |   Update On 2023-11-01 05:50 GMT
  • கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழை காரணமாக சோத்துப்பாறை அணை அதன் முழுகொள்ளளவான 126.40 அடியை எட்டியது.
  • தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தார்.

பெரியகுளம்:

பெரியகுளம் அருகே மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது சோத்துப்பாறை அணை. இதன்மூலம் பெரியகுளம், வடுகபட்டி, ஜெயமங்கலம், குள்ளப்புரம், தாமரைக்குளம் ஆகிய பகுதிகளில் ஏராளமான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழை காரணமாக சோத்துப்பாறை அணை அதன் முழுகொள்ளளவான 126.40 அடியை எட்டியது. அதனைதொடர்ந்து விவசாய பணிகளுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதனையடுத்து அணையிலிருந்து இன்று தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தார்.

இன்றுமுதல் அடுத்தவருடம் மார்ச் மாதம் 15-ந்தேதி வரை 136 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. முதல் 45 நாட்களுக்கு 30 கனஅடிநீரும், அடுத்த 31 நாட்களுக்கு 27 கனஅடிநீரும், 60 நாட்களுக்கு 25 கனஅடிநீரும் என திறக்கப்பட உள்ளது.

Tags:    

Similar News