உள்ளூர் செய்திகள்

பெண்களுக்கான கபடி போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்ற வீராங்கனைகளை படத்தில் காணலாம்.

கிருஷ்ணகிரியில் மண்டல அளவிலான கபடி தேர்வு போட்டி

Published On 2023-09-03 16:03 IST   |   Update On 2023-09-03 16:03:00 IST
  • கிருஷ்ணகிரியில் மண்டல அளவிலான கபடி தேர்வு போட்டி நடைபெற்றது.
  • கபடி போட்டியில் 4 மாவட்டங்களில் இருந்து வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், சேலம் மண்டல அளவில் கபடி தேர்வு போட்டி நேற்று முன்தினம் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்துரை தலைமையில். 14, 17 வயது மற்றும், 19 வயதுக்குட்பட்ட 3 பிரிவுகளில் போட்டிகள் நடந்தது. கடந்த 1-ந் தேதி ஆண்களுக்கும், நேற்று பெண்களுக்குமான கபடி தேர்வு போட்டி நடந்தது.

இதில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், மற்றும் நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த கபடி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். நேற்று முன்தினம் நடந்த கபடி தேர்வு போட்டியில், 292 ஆண்களும், நேற்றைய கபடி தேர்வு போட்டியில், 172 வீராங்கனைகளும் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு பிரிவிலும் சிறந்து விளையாடும், 7 கபடி வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு, மாநில அளவிலான போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்கள். 

Tags:    

Similar News