உள்ளூர் செய்திகள்

மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளதா என போலீஸ் சூப்பிரண்டு பகலவன் கேட்டறிந்தார்.

பொதுமக்களின் புகார் மனு மீது போலீசாரின் நடவடிக்கை குறித்து கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

Published On 2022-12-22 08:27 GMT   |   Update On 2022-12-22 08:27 GMT
  • அதிகாரிகளிடம் அளித்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மனுதாரர்களை நேரில் அழைத்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
  • 21 நபர்களின் மனுக்களை மீண்டும் மறு விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டார்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மந்தவெளி அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பொதுமக்கள் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் அளித்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மனுதாரர்களை நேரில் அழைத்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 19 சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே மனு அளித்து விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட சுமார் 80 நபர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களிடம் சட்டம் ஒழுங்கு, நில அபகரிப்பு மற்றும் பணமோசடி, தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் அளித்த மனு மீது உரிய முறையில் விசாரணை நடத்தப்பட்டதா, மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளதா என்பன போன்ற பல்வேறு விபரங்களை போலீஸ் சூப்பிரண்டு பகலவன் கேட்டறிந்தார். தொடர்ந்து சுமார் 21 நபர்களின் மனுக்களை மீண்டும் மறு விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டார். அப்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஜவஹர்லால், விஜய் கார்த்திக் ராஜா, கள்ளக்குறிச்சி உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்ரமணியன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு திருமேனி, மது விலக்கு அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.

Tags:    

Similar News