உள்ளூர் செய்திகள்

தேர்வில் கலந்து கொள்ள வந்த ஒரு பெண்ணின் உயரம் சரிபார்க்கப்பட்ட காட்சி.

பாளை ஆயுதப்படை மைதானத்தில் மாநகர ஊர்க்காவல்படைக்கு ஆட்கள் தேர்வு - 200 பேர் பங்கேற்பு

Published On 2022-08-06 09:31 GMT   |   Update On 2022-08-06 09:31 GMT
  • ஆயுதப்படை மைதானத்தில் நடந்த தேர்வில் 200-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.
  • வெற்றி பெறுபவர்களுக்குரூ.560 ஊதியத்தில் மாதத்தில் 5 நாட்கள் பணி வழங்கப்படும்.

நெல்லை:

நெல்லை மாநகர ஊர்க்காவல்படைக்கு ஆட்கள் தேர்வுக்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டது. இதற்கான தேர்வு பாளை ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்றது.

மாநகர போலீஸ் கமிஷனர் அபினாஷ் குமார் உத்தரவின் பேரில் துணை கமிஷனர்கள் சீனிவாசன், அனிதா மேற்பார்வையில் நடைபெற்ற தேர்வில் 200-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.

மாநகர பகுதியில் காலியாக உள்ள 39 ஆண்கள் மற்றும் 7 பெண்களுக்கான பணிகளுக்கு நடத்தப்பட்ட தேர்வில் மாநகர பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது.

இன்று கலந்து கொண்டவர்கள் சான்றிதழ், ஆவணங்களை உதவி கமிஷனர் சரவணன், மாநகர ஊர்க்காவல் படையின் வட்டார தளபதி சின்னராஜா, ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் டேனியல் கிருபாகரன், ஊர்க்காவல் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பவுல் ஞானபிரகாசம் ஆகியோர் அடங்கிய குழுவினர் சரிபார்த்தனர்.தொடர்ந்து அவர்களுக்கு தேர்வு நடத்தபடும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு 45 நாட்கள் அடிப்படை பயிற்சிகள் வழங்கப்பட்டு தினமும் ரூ.560 ஊதியத்தில் மாதத்தில் 5 நாட்கள் பணி வழங்கப்படும். இதைத் தொடர்ந்து ஊர்க்காவல் படையில் தேர்வு செய்யப்படு பவர்கள் என்ன செய்ய வேண்டும். அவர்களுக்கான விதிமுறைகள், தகவல்கள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது. 

Tags:    

Similar News