உள்ளூர் செய்திகள்

ரூபாய் நோட்டுகளாலும் மலர்களாலும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் தீ மிதி விழா நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

Published On 2022-11-03 06:37 GMT   |   Update On 2022-11-03 06:37 GMT
  • ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது.
  • இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 18-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது. இக் கோவில் திருவிழா ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் நடந்து வருவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 18-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

இதையொட்டி தினந்தோறும் கட்டளை தாரர்கள் சார்பில் அம்மன் ஊர்வலமும், அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் நடந்தன. கடந்த 31-ந் தேதி பக்தர்கள் கோவிலை சுற்றி பூவோடு எடுத்து வந்தனர். பக்தர்கள் உருளை தண்டம் போட்டனர். நேற்று அம்மை அழைத்தல் நடந்தது. காலை முதல் இரவு வரை நூற்றுக் கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.

இன்று (வியாழக்கிழமை) அதிகாலையில் தீ மிதி விழா நடந்தது. மழை தூறல் விட்டு விட்டு பெய்தநிலையிலும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்தும், கையில் வேப்பிலை ஏந்தி தீ மிதித்தனர். சில பெண்கள் வேண்டுதலை நிறைவேற்ற கைக் குழந்தையுடன் தீ மிதித்தனர்.

வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு குறைந்த அளவில் பக்தர்கள் தீ மிதித்தனர். தீ மிதி விழாவை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். திருவிழாவை–யொட்டி இன்று மாலையில் மாரியம்மன் தேரோட்டம் நடக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை)உடற்கூறு வண்டிவேடிக்கை நடக்கிறது.

வருகிற 5-ந் தேதி இரவு மாரியம்மன் சாமி வர்ண விளக்கு ஜோடனை மற்றும் வாணவேடிக்கையுடன் புஷ்ப பள்ளக்கில் பவனி வருதல் மற்றும் சப்தாபரணம் நடக்கிறது. ராசிபுரம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags:    

Similar News