தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
- அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்
- தி.மு.க. சுற்றுச்சூழல் அணி சார்பில் நடந்தது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மற்றும் வாலாஜாவில் மாவட்ட தி.மு.க சுற்றுச்சூழல் அணி சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா மற்றும் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது,
இதனை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை ராணிப்பேட்டை முத்துக்கடை மற்றும் வாலாஜா பஸ் நிலையங்களில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
இதில் ராணிப்பேட்டை, வாலாஜா நகரமன்ற தலைவர்கள் சுஜாதா வினோத், ஹரிணி தில்ல, துணை தலைவர்கள் ரமேஷ்கர்ணா, கமல் ராகவன், நகர செயலாளர்கள் பூங்காவனம், தில்லை, நகரமன்ற உறுப்பினர்கள் அப்துல்லா, வினோத், குமார், கோபி, இர்பான் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.