உள்ளூர் செய்திகள்

வாலாஜா திருமலை நகரில் பகுதி நேர ேரசன் கடை

Published On 2022-09-12 15:19 IST   |   Update On 2022-09-12 15:19:00 IST
  • அமைச்சர் ஆர்.காந்தி திறந்துவைத்தார்
  • கலெக்டர் தலைமை தாங்கினார்

வாலாஜா:

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த அனந்தலை ஊராட்சியில் திருமலை நகரில் பகுதி நேர ரேசன் கடை திறப்பு விழா இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.கூட்டுறவு சங்கங்களின் மேலாண்மை இயக்குனர் நந்தகோபால், மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் சந்திரன் வரவேற்றார்.நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு பகுதி நேர ரேசன் விலைக் கடையை குத்துவிளக்கு ஏற்றி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

இதனைதொடர்ந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ரமணன், வாலாஜா கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகம், கோட்டாட்சியர் பூங்கொடி, வட்டாட்சியர் ஆனந்தன், வட்ட வழங்கல் அலுவலர் ராஜலஷ்மி, ஊராட்சிமன்ற தலைவர் தேவகி மகாதேவன், துணை தலைவர் மீனா பெருமாள், நகரமன்ற தலைவர் ஹரிணி தில்லை, துணை தலைவர் கமலராகவன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, பாஸ்கரன் உள்பட நகரமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் அரசு அலுவலர்கள் கூட்டுறவு கடன் சங்க இயக்குனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிவில் வாலாஜா கிழக்கு ஒன்றிய மகளிரணி தலைவர் லாவண்யா நன்றி கூறினார்.

Tags:    

Similar News