- ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்
- போலீசார் குவிப்பு
நெமிலி:
நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட சயனபுரம் ஊராட்சியில் நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலை வர் பவானி தலைமையில் கிராம சபைக்கூட்டம் நடைபெற் றது.
அப்போது சுமார் 100-க்கும் மேற்பட்டோர் ஊராட்சியில் எந்தவித வளர்ச்சிபணி களும் நடைபெறவில்லையென்றும், பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்தும் கிராம சபை கூட் டத்திற்கு வராமல் புறக்கணிப்பு செய்தனர்.
பின்பு கிராம சபை புறக்கணிப்பு கூட்டதுண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்து ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே கிராம சபை புறக்கணிப்பு கூட்டத்தை நடத்தினர். அப்போது ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங் களை எழுப்பினர்.
இந்த நிலையில் அப்பகுதியில் எந்த அசம்பாவிதமும் நடை பெறாமல் இருக்க 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப் பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகு தியில் பெரும் பரபரப்பு நிலவியது.