உள்ளூர் செய்திகள்

மாணவியை மிரட்டி கற்பழித்த டியூசன் மாஸ்டர்

Published On 2023-07-12 13:43 IST   |   Update On 2023-07-12 13:43:00 IST
  • போக்சோவில் வழக்கு பதிவு
  • பலமுறை வெளி இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார்

ராணிப்பேட்டை:

வாலாஜாவில் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்நாதன்(40) திருமணமானவர். இவர் வாலாஜாவில் உள்ள தனியார் டியூசன் சென்டரில் வேதியியல் பாட ஆசிரியராக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் செந்தில்நாதனுக்கு டியூசன் சென்டருக்கு படிக்க வந்த 17வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் செந்தில்நாதன் தனது பிறந்த நாள் அன்று மாணவியை வீட்டிற்கு அழைத்து சென்று ஆசை வார்த்தை கூறி வலுக்கட்டாயமாக மாணவியை பலாத்காரம் செய்தார்.

மேலும் இது குறித்து வெளியே கூறினால் உன்னை ஒழித்துவிடுவேன் என மிரட்டியதோடு பலமுறை வெளி இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.

மாணவியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் பள்ளிக்கு சென்று விசாரித்துள்ளனர். விசாரித்த போது மாணவி பள்ளிக்கு சரிவர வருவதில்லை அதிகாரிகள் கூறினர். இதுகுறித்து பெற்றோர் மாணவியிடம் விசாரித்த போது தனக்கு நடந்த கொடுமையை கூறினார்.

இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரின் இன்ஸ்பெக்டர் ஷாகின் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள டியூசன் மாஸ்டர் செந்தில்நாதனை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News