உள்ளூர் செய்திகள்
ஏரி மண் ஏற்றி வந்த லாரிகள் சிறை பிடிப்பு
- நீர் ஆதாரம் பாதிக்கும்
- பொதுமக்கள் வலியுறுத்தல
ராணிப்பேட்டை,
ராணிப்பேட்டை அருகே உள்ள கல்மேல்குப்பம் கிராம ஏரியிலிருந்து நேற்று மாலை லாரிகளில் மண் ஏற்றப்பட்டது.
இதை அறிந்த கல்மேல்குப்பம் கிராம பொதுமக்கள், ஏரியில் மண் அள்ளப் படுவதால் தங்களுக்கான நீர் ஆதாரம் பாதிக்கும் என கூறி ஏரி மண் ஏற்றி வந்த லாரிகளை சிறைபிடித்தனர். இது பற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராணிப்பேட்டை போலீசார் , லாரிகளை சிறைபிடித்திருந்த பொதுமக்களிடம் அரசின் உரிய அனுமதிகள் பெற்றுத்தான் ஏரியில் மண் அள்ளப் படுவதாகவும், இதை தடுப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து லாரிகளை மீட்டனர்.
ஏரியில் மண் அள்ளப்படுவதில் கிராம மக்களுக்கு ஆட்சேபனை இருந்தால் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட அறிவுறுத்தினர். இதையடுத்து கிராம பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.