உள்ளூர் செய்திகள்

கார் மோதியதில் மின்கம்பம் உடைந்து விழுந்தது

Published On 2022-10-12 15:25 IST   |   Update On 2022-10-12 15:25:00 IST
  • 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
  • 10 மணி நேரத்திற்கு மேல் மின் தடை

ராணிப்பேட்டை:

ஆந்திர மாநிலம், சித்தூர் பகுதியை சேர்ந்தவர் திருக்குமரன் (50). இவர் குடும்பத்தினருடன் காரில் சென்னை வந்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

காரை அவரே ஓட்டிச்சென்றார். ராணிப்பேட்டை எம்.பி.டி சாலையில் நவல்பூர் அருகே சென்றபோது திடீரென நிலை தடுமாறிய கார் சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதியது.

இதில் மின் கம்பம் சேதம் அடைந்து, காரின் மீது உடைந்து விழுந்தது. நல்லவேளையாக காரை ஓட்டி சென்ற திருக்கும ரன், மற்றும் அதில் பயணம் செய்த அவரது மனைவி, மகன், மகள் ஆகியோர் தப்பினர்.

மின் கம்பம் உடைந்து விழுந்ததில், மின்சாரம் தடை ஏற் பட்டது. சுமார் 10 மணி நேரத்திற்கு மேல் மின் தடை நீடித்தது. மின் ஊழியர்கள் கடுமையாக முயற்சி எடுத்து மின் வினியோகம் வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News