உள்ளூர் செய்திகள்
மின்சாரம் தாக்கி மேற்பார்வையாளர் பலி
- மின் கம்பத்தில் ஏறியபோது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
திருப்பத்தூர் மாவட்டம் வள்ளிப்பட்டு பகுதியில் உள்ள மசால் வட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் (வயது 28). இவர் ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த சின்னத்தக்கை கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக இருந்தார்.
நேற்று காலை அருகே இருந்த மின் கம்பத்தின் ஏணியின் மூலம் ஏறி உள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக சேகர் மீது மின் சாரம் தாக்கியுள்ளது.இதில் தூக்கி வீசப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது சேகர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் .இந்நிலையில் தனியார் கம்பெனி இது குறித்து திமிரி போலீ சாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.