உள்ளூர் செய்திகள்

வாலாஜா அடுத்த பாகவெளி கிராமத்தில் கூடுதல் பஸ் இயக்க கோரி மாணவர்கள் அரசு பஸ்சை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

அரசு பஸ்சை சிறைப்பிடித்து மாணவர்கள் மறியல்

Published On 2022-09-15 10:33 GMT   |   Update On 2022-09-15 10:33 GMT
  • கூடுதல் பஸ் இயக்க வலியுறுத்தல்
  • 2 மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நீடித்தது

வாலாஜா:

ராணிப்பேட்டை மாவட்டம் வாலா ஜாப்பேட்டை அடுத்த பாகவெளி கிராமத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதற்கு சிரமமாக உள்ளதால், தங்களது கிராமத்திற்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டுமென கூறி மாணவர்கள் அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாலாஜாப்பேட்டை அடுத்த பாகவெளி கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.இந்த ஊரிலிருந்து ஏராளமான மாணவ மாணவிகள் கல்வி பயில்வதற்காக ஆற்காடு மற்றும் விஷாரம் போன்ற நகர பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.ஆனால் தங்களது கிராமத்திலிருந்து இயக்கப்படும் பஸ் வாலாஜாப்பேட்டை வரை மட்டுமே இயக்கப்படுவதாகவும், ஒரே ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுவதால் முசிறி, சென்னசமுத்திரம், தென்கடப்பந்தாங்கல், வள்ளுவம்பாக்கம் பெல்லியப்பா நகர் ஆகிய பகுதிகளிலிருந்து ஏராளமான மாணவர்கள் வருவதால் கூட்ட நெரிசலில் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே தங்களது கிராமத்திலிருந்து இயக்கப்படும் பஸ்சினை விஷாரம் வரை இயக்க வேண்டும் மற்றும் கூட்ட நெரிசலை குறைக்க கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவேரிப்பாக்கம் போலீசார் மற்றும் வாலாஜா பேட்டை தாசில்தார் ஆனந்தன் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்ததின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News