உள்ளூர் செய்திகள்

நகராட்சிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க இடம் தேர்வு

Published On 2023-10-28 07:55 GMT   |   Update On 2023-10-28 07:55 GMT
  • விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது
  • கலெக்டர் பேச்சு

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் வளர்மதி தலைமையில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தங்கள் பயிர்களுக்கு வழங்கப்படும் காப்பீட்டு தொகை போதுமானதாக இல்லை, ராணிப்பேட்டை மாவட்ட த்தில் சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும், அனா தினம் நிலம் என குறிப்பிட பட்டுள்ளதால் பயிர் காப்பீடு பெற முடியவில்லை.

சென்னசமுத்திரம் ஊராட்சி ஏரியில் தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், ஊரகப் பகுதிகளில் கால்நடை மருத்துவர்கள் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும், மருந்தகங்களில் கால்நடை களுக்கு தேவையான மருந்துகள் வழங்க வேண்டும். ராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு மற்றும் விஷாரம் ஆகிய நகராட்சிகளின் கழிவுநீர் பாலாற்றில் கலந்து மாசு ஏற்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும், மானிய விலையில் தீவனங்கள் வழங்க வேண்டும், முகுந்தராயபுரம் ரெயில்வே சுரங்கபாதையை சீரமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதற்கு பதிலளித்து கலெக்டர் பேசுகையில், பயிர் விளைச்சலுக்கு ஏற்ற காப்பீடு வழங்கப்படுகிறதா என வேளாண் மற்றும் வருவாய் துறை அலு வலர்கள் குழு அமைத்து ஆய்வு செய்து காப்பீட்டு தொகை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும்,

ஆற்காடு பகுதியில் புதிய சேமிப்பு கிடங்கு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது ,ராணிப்பேட்டை மாவட்டத்தில் 63 தொடக்க வேளாண்மை கட்டிடங்கள் உள்ளன விவசாயிகள் தங்களது நெல் மூட்டை களை தங்களுக்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கட்டிடங்களில் 100 டன் வரை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம், அனாதின நிலம் குறித்து காப்பீட்டு நிறுவனத்திடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும், கால்நடை மருத்துவர்கள் மருந்தகங்களில் மட்டும் சிகிச்சை அளிக்காமல் கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க வேண்டி இருந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று சிகிச்சை வழங்க வேண்டும், அனைத்து நகராட்சிகளிலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இடம் தேர்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பி வைத்து சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

கூட்டத்தில் பல்வேறு அரசுத்துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News