உள்ளூர் செய்திகள்

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

Published On 2023-05-17 13:59 IST   |   Update On 2023-05-17 13:59:00 IST
  • வருகிற 19-ந் தேதி நடக்கிறது
  • கலெக்டர் தகவல்

ராணிப்பேட்டை:

தமிழ்நாடு அரசு. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வேலைவாய்ப்பு பிரிவின் சார்நிலை அலுவலகங்களான அனைத்து மாவட்ட வேலைவாய்ப்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் ஒவ்வொரு மாதத்தின் 3-வது வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

அதன் அடிப்படையில் வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் பல முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8,10,12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் படித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.

எனவே மேற்காணும் கல்வித்தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வருகிற 19-ந் தேதி அன்று காலை 10 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைபெறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் வளர்மதி கேட்டு கொண்டுள்ளார்.

இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News