உள்ளூர் செய்திகள்

சைபர் குற்றம் குறித்து மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு

Published On 2023-11-24 10:14 GMT   |   Update On 2023-11-24 10:14 GMT
  • போக்சோ சட்டம், குழந்தை திருமணம் ஆகியவை குறித்தும் ஆலோசனை
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

காவேரிப்பாக்கம்:

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி உத்தரவின்பேரில் அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் போதை பொருள், சைபர் குற்றங்கள் குறித்து போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

அதன்படி காவேரிப்பாக்கம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளியில் போலீசார் போதை தடுப்பு மற்றும் சைபர் கிரைம் குற்ற தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கூட்டத்திற்கு காவேரிப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமை தாங்கி மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

கூட்டத்ததில் போதைபொருட்கள் பயன்பாட்டை தடுப்பது குறித்தும், பாலியல் குற்றங்கள் குறித்தும், குற்றங்களில் இருந்து எவ்வாறு விடுபட வேண்டும்? என்பது பற்றியும் எடுத்து கூறப்பட்டது.

மேலும் போக்சோ சட்டம், குழந்தை திருமணம், சமூக ஊடகங்கள் பயன்பாட்டு முறை ஆகியவை குறித்தும் ஆலோசனை வழங்கினர்.

இதைபோல அவளூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சப்தகிரி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சப் இன்ஸ்பெக்டர் அருள்மொழி பாலியல் குற்றங்களை தடுப்பது குறித்தும், போதைபொருட்கள் பயன்பாட்டை எவ்வாறு தவிர்ப்பது என்பது குறித்து ஆலோசனைகளை வழங்கினர். இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News