உள்ளூர் செய்திகள்

சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்தால் அபராதம்

Published On 2023-08-29 14:46 IST   |   Update On 2023-08-29 14:46:00 IST
  • நகர மன்ற கூட்டத்தில் தீர்மானம்
  • பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதால் நடவடிக்கை

ராணிப்பேட்டை:

வாலாஜா நகர மன்றத்தின் சாதாரண கூட்டம் நகர மன்ற தலைவர் ஹரிணி தில்லை தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு துணைத் தலைவர் கமலராகவன், ஆணையாளர் (பொறுப்பு) மங்கையர்க்கரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வாலாஜா நகரில் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றன.

எனவே நகரில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பது உள்பட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News