உள்ளூர் செய்திகள்

பள்ளிக்கு சிறுவர்கள் வாகனத்தை ஓட்டி சென்றால் பெற்றோருக்கு அபராதம்

Update: 2023-02-08 10:35 GMT
  • ராணிப்பேட்டை கலெக்டர் எச்சரிக்கை
  • விபத்துகள் அதிகரிப்பை தடுக்க நடவடிக்கை

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் மொத்த சாலை விபத்துக்களில் பெரும்பாலானவை இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்களால் ஏற்படுகின்றன. இதில் அநேக விபத்துகளில் தலையில் அடிபடுவதால் பாதிப்பு ஏற்பட்டு, உயிரிழப்பு ஏற்படுகிறது.

எனவே, இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களும் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.தலைக்கவசம் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகள் முதலில் எச்சரிக்கை செய்யப்பட்டு அனுப்பப்படுவார்கள். 2வது முறையாக தலைக்கவசம் அணியாமல் இருச்சக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு மோட்டார் வாகன சட்டம் 194 (D) -ன் படி ரூ.1000 அபராதம் விதிக்கப்படும்.

3-வது முறையாக தலைக்கவசம் அணியாமல் இருச்சக்கர வாகனம் ஓட்டுபவர்களின் ஓட்டுநர் உரிமம் 3 மாதங்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், 18 வயது நிரம்பாத சிறார்கள் வாகனத்தை ஓட்டிச் செல்வது மோட்டார் வாகனச் சட்டப்படி குற்றமாகும்.பள்ளிக்கு இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் செல்லும் சிறார்களிடமிருந்து வாகனம் பறிமுதல் செய்யப்படும்.

மேலும் பெற்றோர்களுக்கு ரூ.25,000 ஆயிரம் அபராதமும் 3 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்படும். பெற்றோர்கள் இதில் சிறப்பு கவனம் செலுத்தி 18 வயது நிரம்பாத சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை தடுத்திட வேண்டும்.

ஆகவே, அனைவரும் பாதுகாப்பாக, வாகனத்தை விபத்தின்றி இயக்கி ராணிப்பேட்டை மாவட்டத்தை மோட்டார் வாகன விபத்தில்லாத மாவட்டமாக மாற்ற வேண்டுமென ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News