உள்ளூர் செய்திகள்
நெமிலி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்
- டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க நடவடிக்கை
- சாலை வசதியை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் ஒன்றியக்குழு மாதாந்திர கூட்டம் நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு தலைமை தாங்கி னார். துணைத்தலைவர் தீனதயாளன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், ரவி ஆகியோர் வரவேற்றனர்.
கூட்டத்தில் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் குடிநீர் மற்றும் சாலை வசதியை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும் மழைக்காலங்களில் டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
இதில் ஒன்றிய கவுன்சிலர்கள், அனைத்து துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.