உள்ளூர் செய்திகள்

அரக்ேகாணம் தாலுகா அலுவலகத்தில் இடைத்தரகர்கள் தொல்லை

Published On 2022-12-28 15:28 IST   |   Update On 2022-12-28 15:28:00 IST
  • தாசில்தார் எச்சரிக்கை
  • சான்றிதழ்களை பெற அதிகாரிகளை நேரடியாக அணுக அறிவுரை

அரக்கோணம்:

அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் சாதி, இருப்பிடம், பிறப்பு, இறப்பு, வாரிசு போன்ற சான்றிதழ்கள் பெற்று தருவதாக செயல் படும் இடைத்தரகர்கள் நட மாட்டம் அதிகமாக இருப்ப தாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று இதுகுறித்து அரக்கோணம் தாசில்தார் சண்முக சுந்தரம் கூறியதாவது:-

சான்றிதழ் கேட்டு வரும் பொதுமக்கள் இடைத்தரகர் களை நம்பாமல், சம்பந்தப் பட்ட கிராம நிர்வாக அலுவ லர்கள், வருவாய் ஆய்வாளர் கள் ஆகியோரை அணுகி சான்றிதழ் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அலுவலக ஊழியர்கள், இடைத்தரகர்களுக்கு துணை போவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், இடைத்தரகர்கள் தாலுகா அலுவலகத்திற்கு வந்தால் அவர்களை பிடித்து போலீசில் ஒப்படைக்கப்படுவார்கள் என எச்சரித்தார்.

Tags:    

Similar News