உள்ளூர் செய்திகள்
லாலாப்பேட்டை அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
- பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்
- ஆசிரியர்களின் கால்களில் விழுந்து வணங்கி ஆசிபெற்றனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம், லாலாபேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1987-ம் ஆண்டில் 10-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவ, மாணவியர்கள் சார்பில் ஆசிரியர் தின விழா மற்றும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி 'மலரும் நினைவுகள் நண்பர்கள்' என்ற தலைப்பில் சிப்காட்டில் தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
முன்னாள் மாணவர்கள் தங்கள் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு பள்ளி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அப்போது பள்ளியில் பணிபுரிந்த ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் வி.ஆர்.கல்யாணசுந்தரம், தீனதயாளன், அக்பர், பழனி, கல்யாணி, பிரகாசம், உஷா, ஷீபா ஆகியோர் கலந்து கொண்டு தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை நினைவு கூர்ந்து பேசினர்.
பின்னர் முன்னாள் மாணவ அனைவரும் தங்களின் ஆசிரியர்களின் கால்களை விழுந்து வணங்கி ஆசிபெற்றனர்.