உள்ளூர் செய்திகள்
- 130 மாணவர்கள் 30 நிமிடத்தில் 3000 பஞ்ச் செய்தனர்
- சோளிங்கர் முனிரத்தினம் எம்.எல்.ஏ. சான்றிதழ் வழங்கினார்
சோளிங்கர்:
சோளிங்கர் தனியார் பயிற்சி பள்ளியில் மாணவர்கள் நோபல் உலக சாதனைக்கான நிகழ்ச்சி கராத்தே பயிற்சி தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.
நோபல் வேர்ல்ட் டேக் கார்ட் சி.இ.ஓ. அரவிந்த் முன்னிலையில் 8-ம் வகுப்பு மாணவன் தர்ஷன் ஸ்கேட்டிங் செய்து கொண்டே வலது கையில் சிலம்பு சுற்றுதல் இடது கையில் பஞ்ச் என தொடர்ந்து 2 மணிநேரம் செய்து சாதனை புரிந்தார்.
130 கராத்தே மாணவர்கள் 30 நிமிடத்தில் 3000 பஞ்ச் செய்து சாதனை புரிந்து நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை புரிந்தனர்.
சாதனைக்கான சான்றிதழ்களை சோளிங்கர் ஏ.எம். முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வழங்கினார். நிகழ்ச்சியை கராத்தே பயிற்சியாளர் கார்த்தி ஏற்பாடு செய்திருந்தார்.
இதில் நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி, நகராட்சி துணை தலைவர் பழனி, பெல்.பழனி ஆகியோர் கலந்து கொண்டனர்.