உள்ளூர் செய்திகள்

பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் இடிக்கும் பணிகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்படுகிறது

Published On 2022-11-03 14:59 IST   |   Update On 2022-11-03 14:59:00 IST
  • மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
  • கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு

வாலாஜா:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஏழு ஊராட்சி ஒன்றியங்களில் கலெக்டர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பழுதடைந்த கட்டிடங்களை ஆய்வு செய்து அறிக்கையை அளிக்க உத்தர விட்டிருந்தனர்.

அதன் அடிப்படையில் ஏழு ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 170 பள்ளி கட்டிடங்கள் நீண்ட நாட்கள் ஆகிவிட்ட தாலும், பழுதடைந்து உள்ளதாலும், இடிக்க கணக்கெ டுக்கப்பட்டது. அவற்றில் 77 பள்ளிகளை இடிக்க முதற்கட்டமாக மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் வாலாஜா ஒன்றியம் சென்னசமுத்திரம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 25 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த பழமை வாய்ந்த பழுதடைந்த கட்டிடங்கள் இடிக்கும் பணி நேற்று மாலை நடைபெற்றது. இந்த பள்ளி கட்டிடம் இடிக்கப்படுவதை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழைக் காலம் தொடங்கி உள்ளதால் எஞ்சியுள்ள பள்ளி கட்டிடங்கள் உத்தரவு வழங்கி ஒரு வாரத்திற்குள் எடுக்க வேண்டும் என திட்ட இயக்குநரிடம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கேட்டுக் கொண்டார்.

அதேபோல ஏற்கனவே பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் பழமை வாய்ந்த பள்ளி கட்டிடங்களை இடிக்க உத்தரவு வழங்க ப்பட்டிருந்தது. மொத்தம் 118 பள்ளி கட்டிடங்கள் பழமை வாய்ந்த பள்ளி கட்டிடங்கள் இடிக்க உத்தரவு வழங்கப்பட்டதில் இதுவரையில் 116 பள்ளி கட்டிடங்கள் பொதுப்பணி துறையினரால் இடிக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 பள்ளி கட்டிடங்கள் இந்த வார இறுதிக்குள் இடிக்கப்படும் என தெரிவித்தனர்.

இந்த ஆய்வின் போது திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை ஜி.லோகநாயகி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, பாஸ்கரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News