உள்ளூர் செய்திகள்

குறைதீர்வு கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்த போது எடுத்த படம்.

குறைதீர்வு நாள் கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள்

Published On 2023-10-14 13:11 IST   |   Update On 2023-10-14 13:11:00 IST
  • கண்துடைப்புக்கு நடத்துவதாக குற்றச்சாட்டு
  • ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை உதவி கலெக்டர் அலுவலகத்தில் மாதந்தோறும் இரண்டாவது வெள்ளிக்கிழமைகளில் விவசாய குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்றும் விவசாய குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் உதவி கலெக்டர் வினோத்குமார் பல்வேறு வேலை நிமித்தமாக கலந்து கொள்ளாததால், நேர்முக உதவியாளர் பழனிராஜன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பங்கேற்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிருந்து விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் வந்திருந்தனர்.

கூட்டம் நடைபெற்ற போது அலுவலக பணியாளர்கள் விவசாயிகளுக்கு தேனீர் கொண்டு வந்தனர். அப்போது திடீரென விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர்.

பின்னர் அவர்கள் கூறியதாவது:-

உதவி கலெக்டர் வினோத்குமாருக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடத்தது. இதன் காரணமாக அவர் விடுமுறையில் இருந்தார். பின்னர் பணிக்கு வந்தும்

தொடர்ந்து 4 மாதகாலமாக விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. கூட்டத்தை அவருக்கு இணையான அதிகாரிகள் அல்லது உயர் அதிகாரிகள் தலைமையில் நடத்த வேண்டும். ஆனால் அப்படி நடப்பதில்லை.

குறைதீர்வு கூட்டத்தில் இதர துறை சார்ந்த அலுவலர்களும் முறையாக கலந்து கொள்வதில்லை, கூட்டத்தை முறையாக விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பயன் தரும் வகையில் நடத்தாமல் கண்துடைப்பு கூட்டமாக நடத்துவதை கண்டித்தும், குறித்த நேரத்தில் கூட்டம் நடத்துவதில்லை , மனுக்கள் மீதும் உரிய நடவடிகைகள் எடுப்பதில்லை எனவே கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினோம் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News