உள்ளூர் செய்திகள்

அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவிகளுக்கு உபகரணங்கள்

Published On 2023-03-12 09:05 GMT   |   Update On 2023-03-12 09:05 GMT
  • வெற்றி நம் கைகளில் நிகழ்ச்சி நடந்தது
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

அரக்கோணம்:

மாணவர்கள் கல்வி மற்றும் ஆய்வறிவு அறக்கட்டளை சார்பில் அரக்கோணம் அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவிகள் மன அழுத்தத்திலிருந்து விடுபடவும், தன்னம்பிக்கை மற்றும் விழிப்புணர்வு சிந்தனையை வளர்த்துக்கொண்டு உள்ளத்தெளிவோடு தேர்வை எதிர்கொள்ள *வெற்றி நம் கைகளில்* நிகழ்ச்சி அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்றது.

பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினருமான கௌதம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

நிகழ்ச்சிக்கு செல்ப் அறக்கட்டளை செயலாளர் கோவி பார்த்திபன் தலைமை வகித்தார். சாரண சாரணியர் திட்ட அலுவலர் ரஜினிப்பிரியா வரவேற்றார். அன்னை தெரேசா கிராம வளர்ச்சி நிறுவனர் தேவ ஆசீர்வாதம், குளோ அறக்கட்டளை ஜேம்ஸ், சந்தர், தமிழாசிரியர்கள் விஜயகுமாரி, அலமேலு, கணித ஆசிரியர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் பெருநிறுவன பயிற்சியாளரும், மனோதத்துவ நிபுணருமான *லயன் அமுதாமதியழகன்* மாணவிகளிடையே தன்னம்பிக்கை மற்றும் விழிப்புணர்வு சிந்தனையை தூண்டும் விதமாக பயிற்சியளித்தார்.

அறம் கல்விச்சங்க தலைவர் டாக்டர் கலைநேசன், பள்ளி தலைமை ஆசிரியர் மகாலட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுத்தேர்வெழுதும் 300 மாணவிகளுக்கும் தேர்வுக்கான உபகரணங்களை வழங்கினர்.

நிகழ்ச்சியில் செல்ப் அறக்கட்டளை காப்பாளர்கள் டாக்டர் கோகிலவாணிவேலாயுதம், எஸ்.அருண்குமார், அகாபே எஸ்.பிரதாப்குமார் ஆகியோர் கலந்துகொண்டவனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் தோத்ராவதி நன்றி கூறினார்.

Tags:    

Similar News