உள்ளூர் செய்திகள்
அரக்கோணம் பகுதியில் சாலைகளை சரி மட்டமாக அமைக்க வலியுறுத்தல்
- 4 செயலாளர் குழு நியமனம்
- கூட்டத்தில் நகராட்சி தலைவர் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
அரக்கோணம் தமிழ்நாடு குடியிருப்பு வீட்டு வசதி வாரிய பகுதியில் நகர பகுதி சபா கூட்டம் நடைபெற்றது.
கவுன்சிலர் செந்தில்குமார் தலைமையில் தாங்கினார். அரக்கோணம் நகர மன்ற தலைவர் லட்சுமி, நகராட்சி ஆணையாளர் லதா, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
வார்டுகளில் உள்ள குறைகளை கண்டறிய 4 பிரிவாக பிரித்து 4 செயலாளர்களை இக்குழுவினர் நியமித்தனர்.
அரக்கோணம் சாஸ்திரி நகர் பகுதியில் மழைக்காலங்களில் மழை நீர் வீட்டிற்குள் புகுவதால் சாலை அமைக்கும் போது சரி மட்டமாக அமைத்து தர வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் ஆசீர்வாதம், சுகாதார அலுவலர் மோகன், களப்பணியாளர் ஸ்ரீகாந்த், வார்டு மக்கள் கலந்து கொண்டனர்.