உள்ளூர் செய்திகள்
பாலத்தில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும்
- இரவில் செல்ல மக்கள் அச்சம்
- புதிதாக மின் விளக்குகள் அமைக்க வலியுறுத்தல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை-திருவண்ணாமலை மாவட்டங்களை இணைக்கும் பாலம் வாழைப்பந்தல் அருகே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கமண்டல நாகநதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது.
இந்தப் பாலத்தின் வழியாக வாழைப்பந்தல் மன்னார்சாமி கோவிலுக்கு பக்தர்கள் செல்கின்றனர். பாலத்தில் மின் விளக்கு வசதி இல்லை. இரவில் பாலத்தின் மேலே பொதுமக்கள் செல்வதற்கு அச்சமாக உள்ளது.
இப்பாலத்தில் புதிதாக மின் விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.