உள்ளூர் செய்திகள்

வாலாஜா ஊராட்சி ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் நடந்த காட்சி.

ரூ.30 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள்

Published On 2023-10-20 15:04 IST   |   Update On 2023-10-20 15:04:00 IST
  • வாலாஜா ஊராட்சி ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் நடந்தது
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

ராணிப்பேட்டை:

வாலாஜா ஊராட்சி ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் நேற்று ஒன்றிய குழு தலைவர் சேஷா.வெங்கட் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவப்பிரகாசம் , சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். சீக்கராஜபுரம் பகுதியில் கால்நடை மருத்துவ முகாம்கள் நடைபெறும் போது முறையான தகவல்கள் தெரிவிப்ப தில்லை. இதனால் பொதுமக்கள் தொலைவில் உள்ள நவ்லாக் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிரமப்பட்டு வருகின்றனர்.

ஒன்றிய பகுதிகளில் பணிகளுக்கு விடப்படும் டெண்டர்கள் குறித்து உறுப்பினர்களுக்கு தகவல்தெரியப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

ஒன்றியக்குழு தலைவர் பேசுகையில்:-

சீக்கராஜபுரம் பகுதி பொது மக்களின் கால் நடைகளுக்கு சிகிச்சை பெற வசதிக்காக ஏகாம்பரநல்லூர் கால்நடை மருத்துவமனையுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒன்றியக்குழு பதவி ஏற்று 2 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.

இதில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ஒன்றியத்தில் பல்வேறு திட்டங்களின் கீழ் சுமார் ரூ.30 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்றுள்ளது.

இதற்காக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், அமைச்சர் ஆர்.காந்திக்கும் நன்றி தெரிவித்து க்கொள்கிறேன் என்றர்.

கூட்டத்தில் ஒன்றி யக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News