உள்ளூர் செய்திகள்

மின்சாரம் தாக்கி பசுமாடு சாவு

Published On 2023-06-06 14:29 IST   |   Update On 2023-06-06 14:29:00 IST
  • ஒரு மணி நேரம் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது
  • மின்கம்பி அறுந்து கொட்டைகையின் மேல்விழுந்தது

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி சுற்றுவட்டார பகுதிகளான அகவலம், ரெட்டிவலம், கீழ்வீதி, மகேந்திரவாடி ஆகிய பகுதிகளில் நேற்று மாலை ஒரு மணி நேரம் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

இதில் மகேந்திரவாடி கிராமத்தில் அண்ணா நகரில் வசிக்கும் கஸ்தூரி என்பவருக்கு சொந்தமான பசுமாடு அவரது வீட்டருகில் உள்ள கொட்டகையில் கட்டப்பட்டிருந்தது.

நேற்று பலத்த காற்றுடன் கனமழை பெய்தபோது உயர்அழுத்த மின்கம்பி அறுந்து கொட்டைகையின் மேல்விழுந்தது. பசுமாடு மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.

Tags:    

Similar News