வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு
- காலை உணவு திட்டத்திற்கான ஏற்பாடுகளை பார்வையிட்டார்
- மண்புழு உரம் தயாரிக்கும் இடத்தையும் ஆய்வு நடத்தினார்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பேரூராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் வளர்மதி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முதலில் 1-வது வார்டு தந்தை பெரியார் நகரில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கும் பணியை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து 2-வது வார்டு வேல்முருகன் நகரில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி திடக்கழிவு மேலாண்மை மையம் மற்றும் குப்பைகள் தரம் பிரித்து மக்கும் குப்பைகளைக் கொண்டு மண்புழு உரம் தயாரிக்கும் இடத்தையும் ஆய்வு செய்தார்.
பின்னர் பனப்பாக்கம் அரசு மாதிரி பெண்கள் பள்ளியில் முதல் - அமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதா என்பதை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது பேரூராட்சி உதவி இயக்குனர் கணேசன், பேரூராட்சி மன்ற தலைவர் கவிதா சீனிவாசன், உதவி செயற்பொறியாளர் அம்சா, பேரூராட்சி செயல் அலுவலர் குமார், பள்ளி தலைமை ஆசிரியை ஷர்மிளா, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.