உள்ளூர் செய்திகள்

கலவை பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் தர்ணா

Published On 2023-08-03 14:39 IST   |   Update On 2023-08-03 14:39:00 IST
  • 11 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்
  • பேரூராட்சி தலைவர் பேச்சுவார்த்தை நடத்தினார்

கலவை:

கலவை பேரூராட்சியில் 11 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் கீழ் தினசரி தெருவிற்கு சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆண்டுதோறும் தூய்மை பணியாளர்களுக்கு தமிழக அரசு மூலம் தின கூலியாக ரூ.330 ஒப்பந்த அடிப்படையில் டெண்டர் விடப்பட்டு பணி செய்து வருகிறோம், ஆனால் எங்களுக்கு தினசரி கூலியாக ரூ.305 தருகின்றனர்.

போதிய சம்பளம் இல்லாததால் குடும்பம் வறுமையில் உள்ளது எனக் கூறி தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து தகவல் அறிந்த அங்கு வந்த பேரூராட்சி தலைவர் கலா சதீஷ், தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முறையான ஊதியம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News