உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு போர்வை, கட்டில் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை அமைச்சர் காந்தி வழங்கிய போது எடுத்த படம். அருகில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், நகரமன்ற தலைவர் சுஜாதா உள்ளனர்.

அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு போர்வைகள்

Published On 2022-07-10 14:50 IST   |   Update On 2022-07-10 14:50:00 IST
  • அமைச்சர் காந்தி வழங்கினார்
  • பெரிய அதிகாரிகளாக வர மாணவர்களை வாழ்த்தினார்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்ட புதிய கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தை கடந்த ஜூன் 30-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பின்னர் காரை கூட்ரோடு அருகே வருகை தந்து கொண்டிருக்கும் போது அப்பகுதியில் செயல்பட்டு வரும் அரசினர் குழந்தைகள் இல்லத்தை திடீரென ஆய்வு செய்து அடிப்படை வசதிகளை மாணவர்களிடம் கேட்டறிந்து அரசினர் குழந்தைகள் இல்லத்தில் மாணவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து தருமாறு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தியிடம் உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பள்ளியை ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி குழந்தைகள் இல்லத்தில் தங்கி படிக்கும் 55 மாணவர்களுக்கு அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் போர்வை, தலையணை, பாய், கட்டில் உள்ளிட்ட பொருட்களை அவரது சொந்த செலவில் நேற்று வழங்கினார்.

அப்போது அமைச்சர் காந்தி பேசியதாவது:-

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு இல்லங்களில் தங்கி படிக்கு மாணவ மாணவிகளுக்கு என்னென்ன அடிப்படை தேவைகள் உள்ளது என்பதை ஆராய்ந்து அதனை நிவர்த்தி செய்யும்படி தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் மாணவர்களிடம் நன்கு படித்து சமுதாயத்தில் பெரிய அதிகாரிகளாக வர வேண்டும் என மாணவர்களை வாழ்த்தினார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் கண்ணன் ராதா, நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, வட்டாட்சியர் ஆனந்தன், நகரமன்ற உறுப் பினர்கள் கிருஷ்ணன், அப்துல்லா, வினோத், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News