உள்ளூர் செய்திகள்

நகரசபை கூட்டத்தில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாக குற்றம் சாட்டிய கவுன்சிலர்.

அரக்கோணம் நகரசபை கூட்டம்

Published On 2022-08-26 10:18 GMT   |   Update On 2022-08-26 10:18 GMT
  • குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
  • மக்கள் அவதிப்பட்டு வருவதாக புகார்

அரக்கோணம்:

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகராட்சி கூட்டம் நகர தலைவர் லட்சுமி தலைமையில் நடைபெற்றது.இதில் துணைத் தலைவர் கலாவதி அரக்கோணம் நகராட்சி ஆணையாளர் லதா மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கட்சி பாகுபாடு இன்றி தங்கள் வார்டுகளில் குடிநீர் வசதி, குப்பைகளை அகற்றப்பட வேண்டும்.மின்விளக்குகள் எரியவில்லை. எந்த ஒரு வேலையும் நடைபெறவில்லை என்று நகராட்சி அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் சரமாரி குற்றம் சாட்டினர்.

25 வார்டு உறுப்பினர் துரை சீனிவாசன் தன்னுடைய வார்டில் ரேஷன் கடை கேட்டு பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தொடர்ந்து நகர மன்ற துணைத் தலைவர் கலாவதி உட்பட அனைத்துக் கட்சி கவுன்சிலர்களும் அதிகாரிகளின் நடவடிக்கைகளை கண்டித்தனர்.

33வது வார்டு கவுன்சிலர்

பர்கத் பாட்டிலில் நகராட்சி விநியோகம் செய்கின்ற குடிநீரில் கழிவுநீர் கலந்ததாகவும் இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருவதாகவும் புகார் கூறினார்.

Tags:    

Similar News