கலவை அரசு மருத்துவமனையில் இணை இயக்குனர் திடீர் ஆய்வு
- நோயாளிகளிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார்
- குறிப்பிட்ட நேரத்திற்குள் பணிக்கு வர வேண்டும்
கலவை:
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அரசு மருத்துவமனை யில் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் விஜயா முரளி திடீர் ஆய்வு செய்தார். மருத்துவமனையில் உள்ள நோயாளிகளிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து அனைத்து டாக்டர்களையும் அழைத்து அவர்க ளிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது பழுதடைந்த ரத்த பரிசோதனை செய்யும்நுண்ணியல் மைக்ரோ பயாலஜி கருவி புதிதாக வாங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.
மேலும் அவர் கூறுகையில், டாக்டர்களும், செவிலியர்களும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பணிக்கு வர வேண்டும். உள்நோ யாளிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. பல் சிகிச்சை பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
மேலும் காது கேட்கும் கருவி வழங்குவ தற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் டாக்டர்கள், செவிலியர்கள் அன்புடன் பழக வேண்டும் என்று கூறினார்.
அப்போது டாக்டர்கள் விவேக், வெண்ணிலா, சதீஷ்குமார், சங்கீதா, இளவரசி, பல் மருத்துவர் ஹர்சிதா, மருத்துவ எழுத் தாளர் அன்வர் மற்றும் செவிலியர்கள் உடன் இருந்தனர்.