உள்ளூர் செய்திகள்

ராணிப்பேட்டை நகரமன்ற கூட்டம் நகரசபை தலைவர் சுஜாதாவினோத் தலைமையில் நடந்த போது எடுத்த படம்.

நெடுஞ்சாலை ஓரம் இறைச்சி கழிவுகள் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

Published On 2023-03-21 15:06 IST   |   Update On 2023-03-21 15:06:00 IST
  • கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
  • ராணிப்பேட்டை நகர சபை கூட்டம் நடந்தது

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை நகர மன்ற சாதாரணக் கூட்டம் அதன் தலைவர் சுஜாதா வினோத் தலைமையில் நேற்று நடைபெற்றது.

துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வரும் செப்டம்பர் 15 முதல் மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.1000 என ரூ.7000 கோடி நிதியையும் மற்றும் பட்ஜெட்டில் தமிழக மக்களின் அறிய பல பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி நேற்றைய பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும் மற்றும் பல்வேறு தீர்மானங்கள் நேற்று நடந்த ராணிப்பேட்டை நகர மன்ற சாதாரணக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:-

பன்றி தொல்லைகள் அதிகமாக உள்ளது இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் கவுன்சிலர்கள் வார்டுகளில் கொசு மருந்து தெளிப்பதில்லை.குடிநீர் பிரச்சினை உள்ளது.மின்விளக்குகள் அமைக்க வேண்டும.ஈமச்சடங்கு நிதி சரியாக வரவில்லை.மேற்கண்ட கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்கள்.

மேலும் கவுன்சிலர்கள் பிரதான சாலைகள் நடுவே தடுப்பு போடப்பட்டுள்ளது. ஆனால் இரு புறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதனால் விபத்துகள் நடக்கின்றன. மேலும் வார்டுகளில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இவைகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் ராணிப்பேட்டை நகரில் எல்.இ.டி. மின்விளக்குகள் பிரகாசமாக எறிவது போல் கோயில் பள்ளிவாசல் தேவாலயம் சந்திப்புகள் இடங்களில் எல்.இ.டி. பல்புகளை அமைக்க வேண்டும். பழைய பஸ் நிலையம் அருகில் நேற்று பெய்த மழையில் கால்வாய் அடைப்பினால் அங்கு மழை நீர் அதிக அளவில் தேங்கியது.மேற்கண்ட கால்வாயை சீரமைக்க வேண்டும்.ராணிப்பேட்டை பைபாஸ் சாலையில் சில விஷமிகள் ஆட்டு இறைச்சி மாட்டு இறைச்சி கோழி இறைச்சி கழிவுகளை கொட்டி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.அவ்வாறு கழிவுகளை கொட்டுபவர்கள் மீது அபராதத்தோடு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோட்டாட்சியர் அலுவலகம் ஒட்டியுள்ள வீடுகளில் பாம்பு தொல்லை அதிகளவில் உள்ளது. பாம்புகள் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் 30 வார்டுகளில் உள்ள பல்வேறு கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். என திமுக, காங்கிரஸ், விசிக, அதிமுக கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பேசினார்கள்.

இதனை தொடர்ந்து கூட்டத்தில் இதற்கு பதில் அளித்து பேசிய நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத் உங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவேன் என உறுதியளித்தார்.

Tags:    

Similar News