உள்ளூர் செய்திகள்

10 ரூபாய் நாணயம் வாங்க மறுப்பவர்கள் மீது நடவடிக்கை

Published On 2023-01-14 10:08 GMT   |   Update On 2023-01-14 10:08 GMT
  • ராணிப்பேட்டை கலெக்டர் எச்சரிக்கை
  • பொதுமக்கள், வர்த்தகர்கள் தங்கள் அனைத்து பரிவர்த்தனைகளிலும் ரூ.10 நாணயங்களை எந்தவிதத் தயக்கமுமின்றி வாங்க வேண்டும்

ராணிப்பேட்டை:

ராணிப் பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ரூ.10 நாணயம் வாங்க மறுத்தால் நடவடிக்கை எடுக் கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ரூ.10 நாணயங்களின் உண்மைத் தன்மை குறித்த சந்தேகம் காரண மாக பல இடங்களில் வர்த்தகர்கள், பொதுமக்கள் அவற்றைப் பெற தயக்கம் காட்டுவது கவனத்துக்கு வந்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி இந்த நாணயங்களை அச்சிட்டு புழக்கத்தில் விடுகிறது. இந்த நாணயங்களை வாங்க மறுப்பது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும்.

ரூ.10 நாணயங்கள் பொருளாதார, சமூக, பண்பாட்டு விழுமியங்களின் பல்வேறு கருப்பொருள் களை பிரதிபலிக்கும் தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளன.

இந்த நாணயங்களின் நீண்ட கால பயன்பாட்டைக் கருத்தில்கொண்டு, வெவ்வேறு வடிவங்களில் ஒரே நேரத்தில் சந்தையில் புழக்கத்தில் உள்ளன.

இதுவரை ரிசர்வ் வங்கி 14 விதமான ரூ.10 நாணயங்களை வெளி யிட்டுள்ளது. பொதுமக்கள், வர்த்தகர்கள் தங்கள் அனைத்து பரிவர்த்த னைகளி லும் ரூ.10 நாணயங்களை எந்தவிதத் தயக்கமுமின்றி வாங்க வேண்டும். வங்கிகளும் பரிவர்த்தனை மற்றும் பரிமாற்றத்து க்காக ரூ.10 நாணயங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். ரூ.10 நாணயங்களை ஏற்க மறுக்கும் பொதுமக்கள், வர்த்தகர்கள், பஸ் கண்டக்டர்கள், வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News