உள்ளூர் செய்திகள்
சோளிங்கர் - வாலாஜா சாலையில் விழுந்து கிடந்த மின்கம்பம்.
மரம் விழுந்து 4 மின்கம்பங்கள் சேதம்
- போக்குவரத்து பாதிப்பு
சோளிங்கர்:
சோளிங்கர் வாலாஜா நெடுஞ்சாலையில் புத்தேரி அருகே நெடுஞ்சாலை ஓரமாக இருந்த பழமை வாய்ந்த புளியமரம் கிளை ஒன்று திடீரென முறிந்து அப்பகுதியில் நின்ற மின்கம்பம் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 4 மின்கம்பம் தேசமடைந்து நெடுஞ்சாலை குறுக்கே விழுந்தது.
இதனால் சோளிங்கர் வாலாஜா போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மின்துறை ஊழியர்கள் மின் இணைப்பு துண்டித்தனர். நெடுஞ்சாலை ஆய்வாளர் தேவேந்திரன் தலைமையிலான பணியாளர்கள் விபத்துக்குள்ளான புளியமரக்கிளையை அகற்றினார்கள். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.