உள்ளூர் செய்திகள்

கருத்து கேட்பு கூட்டம் நடந்த காட்சி.

ஓச்சேரியில் இருந்து அரக்கோணம் வரை 4 வழிச்சாலை

Published On 2022-08-11 14:53 IST   |   Update On 2022-08-11 14:53:00 IST
  • கருத்து கேட்பு கூட்டம் நடந்தது
  • பொதுமக்கள், வியாபாரிகள் பங்கேற்றனர்

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரியில் தனியார் திருமண மண்டபத்தில் சாலை விரிவாக்கப் பணிகள் குறித்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.

கருத்துக்கேட்பு கூட்டம்

நிகழ்ச்சியில் நெமிலி தாசில்தார் ரவி தலைமை தாங்கினார். ஓச்சேரி-அரக்கோணம் சாலை விரிவாக்கம் புறவழிச்சாலை குறித்து கருத்துக் கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் வியாபாரிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

மேலும் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து புற வழிச் சாலையாக பிரிந்து ஓச்சேரி வழியாக பனப்பாக்கம், நெமிலி சென்று அரக்கோணம் வரை செல்லும் சாலை இருவழி சாலையாக உள்ளது.இதனை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய உள்ளது.

இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு தாசில்தார் ரவி கேட்டுக்கொண்டார். மேலும் இதில் வியாபாரிகள் சங்க தலைவர் விவசாய சங்க தலைவர்கள் கலந்துகொண்டனர் சுபாஷ் மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News